வெளியூரில் இருந்த கணவன்! பக்கத்துக்கு வீட்டுக்குள் சென்ற 21 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கணவன் - மனைவி இடையில் நடந்த சண்டையை தடுக்க முயன்ற இளம்பெண் பெண் மீது துப்பாக்கியால் சுடப்பட்டதால், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியை சேர்ந்தவர் ஜாவித். இவர் தனது மனைவியுடன் வசித்த வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன் தினம் காலையில் மனைவியை வலுக்கட்டாயமாக தாய் வீட்டில் விட்டு வந்தார் ஜாவித்.

பின்னர் மாலையில் மனைவியை அழைத்து வர அங்கு சென்ற நிலையில் அவருடன் வர அப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டது.

இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தனியாக வசித்த ரச்சனா (21) என்ற இளம்பெண் அங்கு வந்து சண்டையை நிறுத்த முயன்றார்.

அப்போது ஜாவித் அவரின் மனைவியை அடிப்பதை பார்த்து கோபப்பட்ட ரச்சனா அவரை அடிக்காதீர்கள் என தடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜாவித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரச்சனா வயிற்றில் சுட்டார்.

இதையடுத்து படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ரச்சனாவில் கணவர் ராஜஸ்தானில் உள்ளார், அவருக்கு தகவல் கொடுதுள்ளோம்.

அவரை சுட்டு விட்டு ஜாவித் தப்பி சென்றுள்ளார், அவர் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளது.

ஜாவித்தை தீவிரமாக வலைவீசி தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்