நடுரோட்டில் தாயின் சடலத்தை மடியில் போட்டு கதறி அழுது மயங்கி விழுந்த மகன்... கண்ணீர் சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழகத்தில் நடுரோட்டில் தாயின் உடலை மடியில் போட்டு அழுது கொண்டே இருந்த மகன் மயக்கமடைந்த சம்பவம் மனதை பிசையும் வகையில் அமைந்துள்ளது.

திருச்சி அருகே மல்லிகா என்ற பெண் தனது மகன் சதீஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற மினி லொறி மோதியதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சதீஷ் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அளித்து நீண்ட நேரம் ஆகியும் மல்லிகாவின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் தாயின் உடலை மடியில் போட்டு அழுது கொண்டே இருந்த மகன் சதீஷூம் மயக்கமடைந்தார்.

விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், அங்குள்ள தடுப்பு வேலி உள்ளதை தெரியப்படுத்தும் வகையில் அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டாததாலும் போக்குவரத்து பொலிசாரின் அஜாக்கிரதையாலும் இந்த விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.

மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடந்த முயன்றதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

பின்னர் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த ஆம்புலன்சில் மல்லிகாவின் உடலை பொலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தப்பி ஓடிய லொறி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்