திருமண உடையில் வரச் சொன்ன பெண்கள்... அம்பலமான தாயாரின் சூழ்ச்சி: சிறுமியின் பகீர் அனுபவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்திய தலைநகர் டெல்லியில் பெற்ற தாயாரால் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட சிறுமி, அந்த கும்பலிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லியில் தாயார் ஒருவர் தமது 15 வயது மகளை அழைத்துக் கொண்டு ஹொட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கே அவரை இளைஞர் ஒருவரிடம் ஒப்படைத்த நிலையில், தாம் பாலியல் தொழில் கும்பலிடம் விற்கப்பட்ட உண்மை தெரியவந்துள்ளது.

அங்கிருந்து தப்பிய அவரை டெல்லி மகளிர் ஆணையம் காப்பாற்றியுள்ளது. கடந்த 8 ஆம் திகதி குறித்த 15 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு அவரது தாயார் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.

சிறுமியிடம், அவரது சகோதரியின் குடியிருப்புக்கு செல்வதாக கூறியிருந்துள்ளார். ஆனால் அப்துல் என்பவரிடம் தமது மகளை ஒரு லட்சம் பணத்திற்கு அவர் விற்றுள்ளார்.

ஹொட்டலில் ஷாகித் என்பவரிடம் தமது மகளை ஒப்படைத்துள்ளார் அந்த தாயார். மேலும், அவர் குடியிருப்புக்கு அழைத்துச் செல்வார் எனவும் மகளிடம் கூறியுள்ளார்.

ஷாகித் அந்த சிறுமியை தமது குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஏராளமான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இருந்துள்ளனர்.

இதனிடையே, ஷாகிதுடன் சென்ற சிறுமியிடம் அங்கிருந்த பெண்கள், திருமண உடையை அணிந்து கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த சிறுமி காரணம் என்னவென விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் சொன்ன தகவல் சிறுமிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. மட்டுமின்றி தமது தாயாரின் சூழ்ச்சியும் தெரியவந்தது.

தமது தாயார் வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அங்குள்ள பெண்கள் கூறியது, குறித்த சிறுமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

10 ரூபாய் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், அதே நாளில் அங்கிருந்து தப்பி தமது குடியிருப்பு பகுதிக்கு சென்று, நடந்தவற்றை கூறி உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் உடனடியாக டெல்லி மகளிர் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் முன்னெடுத்த விசாரணையில், குறித்த சிறுமியை அப்துல் என்பவர் ஹரியானாவில் உள்ள 62 வயது முதியவருக்கு மணம் முடிக்க கேட்டதாகவும்,

அதற்கு ஒப்புக்கொண்ட தாயாருக்கு அவர் ஒரு லட்சம் பணம் வழங்கியதாகவும் அவர் மகளிர் ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்