100 ரூபாய் முதலீடு... லொட்டரி சீட்டில் கோடிகளை அள்ளிய 6 நண்பர்கள்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்திய மாநிலம் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட திருவோணம் பம்பர் லொட்டரியில் 12 கோடி ரூபாய் முதற் பரிசை நண்பர்கள் 6 பேர் அள்ளியுள்ளனர்.

கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேர் சேர்ந்து தலா ரூ.100 கொடுத்து 600 ரூபாய்க்கு 2 லொட்டரி சீட்டு வாங்கியுள்ளனர்.

இந்த லொட்டரி சீட்டுக்கு குலுக்கல் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. இதில் டிக்கெட் எண் டிஎம் 160869 என்ற எண்ணுக்கு முதல் பரிசு விழுந்தது.

இந்த லொட்டரி எண்ணுக்குரிய சீட்டை கொல்லம் நகரில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் ரோனி, சுபின் தாமஸ், ராம்ஜின், ராஜீவன், ரதீஷ், விவேக் ஆகியோர் வாங்கி இருந்தனர்.

இதுகுறித்து விவேக் கூறுகையில் “ நாங்கள் இதற்கு முன் இதுபோல் எல்லோரும் சேர்ந்து பணம் போட்டு லொட்டரி வாங்குவது வழக்கம்.

இந்த முறையும் விளையாட்டுக்குத்தான் வாங்கினோம். ஆனால், கோடிக்கணக்கில் பரிசு கிடைத்ததை நம்ப முடியவில்லை.

இந்த பணத்த வைத்து என்ன செய்யலாம் என யோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

இந்த பரிசுத் தொகை ரூ.12 கோடியில் ரூ.7.56 கோடி மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்