உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 5 பெண்கள்... லேப்டாப்பில் இருந்த காட்சிகள்... அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பல பிரபலங்களை பாலியல் தொடர்பில் மிரட்டி சொகுசாக வாழ்ந்த ஐந்து பெண்களின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரை சேர்ந்த அரசு அதிகாரி ஹர்பஜன் சிங் என்பவர் பொலிசில் மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ஷிவானி மற்றும் ப்ரீத்தி என்ற இரு பெண்களுடன் நான் உல்லாசமாக இருந்தேன், அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டுகின்றனர்.

பல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து பொலிசார் அந்த பெண்களுக்கு ஹர்பஜன் பணம் கொடுக்க சம்மதம் தெரிவிப்பது போல அவர்களை வரவழைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

இரண்டு பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இதில் மேலும் மூன்று பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த காட்சிகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஐந்து பெண்களும் தோழிகளாக இருந்துள்ளனர். இவர்களின் பழக்க, வழக்கம் எல்லாம் மேலிடம்தான்.

அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை இவர்களுக்குப் பழக்கம் இருந்திருக்கிறது.

அவர்களுக்கு விலை மாதர்களை அனுப்பி வந்துள்ளனர். அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

பின்னர், இதை வைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் பல பிரபலங்கள் இருப்பதால் விவகாரம் பெரிதாகியுள்ளது

பொலிசார் கூறுகையில் இந்த விடயத்தில் மூளையாக செயல்பட்டவர் ஷிவானி தான்.

ஐந்து பேரும் சேர்ந்து போபால் மற்றும் இந்தூர் பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பெண்களை அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது நடப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

கிடைக்கும் பணத்தில் ஆடி, பென்ஸ் கார், பப், சொகுசு வீடு என வாழ்ந்து வந்துள்ளனர்.

13-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளோம். அனைத்து விடயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்