சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட இளம் தம்பதியிடம் கோடிக்கணக்கில் வந்த பணம்... அதனால் அவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் ஏழை தம்பதியின் வங்கி கணக்கின் மூலம் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் இருவரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் Cuttack நகரை சேர்ந்தவர் திபேந்திரா ரவுட். இவர் மனைவி சஷ்மிதா சேது.

திபேந்திரா கூலி வேலை செய்து வரும் நிலையில் சஷ்மிதா நோயாளிகள் வீட்டுக்கே சென்று அவர்களை கவனித்து கொள்ளும் செவிலியர் பணி செய்து வந்தார்.

இருவருக்கும் சொற்ப வருமானவே வந்த நிலையில் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த சமயத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் திபேந்திரா - சஷ்மிதாவை தேடி அவர்கள் வீட்டுக்கு வந்து பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதையடுத்து அவர் சொன்ன நிறுவனத்துக்கு இருவரும் சென்று தங்களின் புகைப்படங்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளை சமர்ப்பித்தனர்.

பின்னர் இருவர் பெயரிலும் நிறுவனத்தின் உரிமையாளர் வங்கி கணக்கை ஆரம்பித்து கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி இருவருக்கும் வேலை கிடைக்காத நிலையில் அவர்களுக்கு நிறுவனத்தின் உரிமையாளர் 10,000 ரூபாய் கொடுத்தார்.

இந்த சூழலில் திபேந்திரா - சஷ்மிதாவுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தது.

அதில் திபேந்திரா வங்கி கணக்கின் மூலம் ரூ 2.87 கோடி பரிவர்த்தனை நடந்தது எனவும், சஷ்மிதா கணக்கின் மூலம் ரூ 1.56 கோடி கோடி பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இதை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைந்தனர், இதையடுத்து இது தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ள அவர்கள் தங்கள் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என தெரியாது எனவும் தங்களை காப்பாற்றும்படியும் கண்ணீருடன் கோரியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்