நான்கு கால்கள் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!

Report Print Balamanuvelan in தெற்காசியா

நான்கு கால்கள் மற்றும் மூன்று கைகளுடன் கூடிய அதிசய குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் இந்தியாவின் ராஜஸ்தானிலுள்ள பெண் ஒருவர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த Mum Raju (24) என்ற இளம்பெண் இரட்டைக்குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன. அந்த ஆண் குழந்தை ஆரோக்கியமாக, நல்ல முறையில் உள்ள நிலையில், அதனுடன் பிறந்த பெண் குழந்தைக்கோ நான்கு கால்களும் மூன்று கைகளும் உள்ளன.

அந்த உபரி கைகளும் கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட உள்ளன. அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதிலும் கொஞ்சம் பிரச்சினை உள்ளது.

Caters News Agency

அவருக்கு சுவாசிப்பதற்கு உதவியாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.

கூலித்தொழில் செய்யும் Mum Rajuவும் அவரது கணவர் Badhulal Gurjar தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இருவரும் படிப்பறியாதவர்கள் என்பதால், அவர்கள் இதுவரை ஸ்கேன் எதையும் எடுக்கவில்லை.

அத்துடன் Mum Rajuவின் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதும் அவர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Caters News Agency
Caters News Agency
Caters News Agency

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்