இந்திய பிரதமர் மோடியை தவறாக கூறிய இம்ரான்கான்! நெட்டிசன்கள் கிண்டல்

Report Print Kabilan in தெற்காசியா

ஐ.நா சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடியை ‘குடியரசுத் தலைவர்’ எனக் கூறியதால் சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஐ.நா சபையின் 74வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். முதல்முறையாக உரையாற்றிய அவர், உலக நாடுகளின் தலைவர்கள் பேச 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

ஆனால், இம்ரான் கான் 50 நிமிடங்கள் பேசினார். கூடுதல் நேரத்தில் பேசிய அவர், அதில் பெரும்பாலும் இந்தியா மற்றும் காஷ்மீர், அணு ஆயுதங்கள் பற்றியே பேசினார்.

அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டு பேசினார். இதனைத் தொடர்ந்து அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ஏப்ரல் மாதம் நடந்த ஈரான் ஜனாதிபதியுடனான செய்தியாளர் சந்திப்பில் ஜேர்மனியும், ஜப்பானும் எல்லையை ஒட்டிய நாடுகள் என்று இம்ரான் கான் குறிப்பிட்டார். அப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்