ஜாலியாக நடனமாடிய போது சுருண்டு விழுந்து வாயில் இரத்தம் வழிந்தபடி இறந்த நபர்... அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் நவராத்திரி விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்த நபர் திடீரென கீழே சுருண்டு விழுந்து வாயில் இரத்தம் வழிந்தபடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் ஜகதீஷ். இவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் மவுண்ட் அபுவுக்கு வந்தார்.

பின்னர் மாலை அங்குள்ள ஒரு ஹொட்டலில் அனைவரும் உணவு சாப்பிட்ட பின்னர் நவராத்திரி விழா நடந்தது.

அப்போது ஜெகதீஷ் உள்ளிட்ட அனைவரும் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் ஜெகதீஷ் திடீரென கீழே சுருண்டு விழுந்தார், இதை பார்த்து பதறிய நண்பர்கள் அவர் அருகில் சென்ற போது ஜெகதீஷ் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நவராத்திரி விழாவால் கலைக்கட்டிய இடம் துக்கம் சூழ்ந்த இடமாக மாறியது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ஜெகதீஷ் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் ஜெகதீஷ் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.