இனச்சேர்க்கைக்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு ஆண் புலிகள்: ஒரு அபூர்வ வீடியோ!

Report Print Balamanuvelan in தெற்காசியா

இந்திய வனப்பகுதி ஒன்றில், பெண் புலி ஒன்றுடன் இனச்சேர்க்கைக்காக இரண்டு ஆண் புலிகள் சண்டையிட்டுக்கொள்ளும் அபூர்வ காட்சி ஒன்று கமெராவில் சிக்கியுள்ளது.

புலிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சிலர், திடீரென ஒரு புலி அங்கிருந்த மற்றொரு புலியுடன் சண்டையிடுவதைக் கண்டு தங்கள் கமெராக்களை விரைந்து க்ளிக் செய்ய ஆரம்பித்தனர்.

அந்த புலிகள் மனிதர்களைப்போல இரண்டு கால்களில் நின்று, பயங்கரமாக உறுமியவாறு, கைகளால் அறைவது போல ஒன்றையொன்று தாக்கும் காட்சி காண்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இறுதியில் வெற்றி பெற்ற ஆண் புலி, பெண் புலியுடன் தனது சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது!

அந்த இரண்டு ஆண் புலிகளையும் கவர்ந்த அந்த அழகியின் (பெண் புலி) பெயர் நூர் என்று வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானிலுள்ள Ranthambore தேசிய பூங்காவில் நடந்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்