தீவிரவாதிகளுக்கு நிதியுதவி.. கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான்? இன்று வெளியாகும் அறிவிப்பு

Report Print Kabilan in தெற்காசியா

சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் புதிய பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, FATF என்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது.

பிரான்சின் பாரிஸ் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது.

இதன் காரணமாக சர்வதேச அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் அந்நாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று எச்சரித்திருந்த FATF, 27 செயல் திட்டங்களை 15 மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

அவ்வாறு செய்தால் இந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என்று, அந்நாட்டின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தங்களின் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை எனக் கூறி சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் பட்டியலில் பாகிஸ்தான் தொடருவதால், அடுத்ததாக கருப்புப் பட்டியலில் அந்நாடு சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், FATF இன்று புதியப் பட்டியலை வெளியிடுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்