இந்தியாவில் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகள் கணவரின் சகோதரரை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 37 வயது பெண்ணுக்கு 18 வயதில் மகள் உள்ளார். அவரும் 21 வயதான இளைஞரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மகளின் கணவருக்கு 22 வயதில் ஒரு அண்ணன் உள்ள நிலையில் அவருடன் 37 வயது பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது.
அதாவது தனது மாப்பிள்ளையின் அண்ணனை காதலித்தார்.
இதையடுத்து தனது கணவரை விவாகரத்து செய்த அப்பெண், 22 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டு மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதற்கு அவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிமன்றத்தை புதுமணத்தம்பதி நாடிய நிலையில் சட்டபூர்வமாக தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கோரியுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 31ஆம் திகதி நடக்கவுள்ளது.