காதல் ஜோடிகள் தான் எங்கள் குறி... ஜாலியாக இருப்போம்! கொள்ளையனின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in தெற்காசியா

தமிழகத்தில் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பல் தலைவன் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறி செய்வேன், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலை அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் கடந்த பல மாதங்களாக அதிகளவிலான கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாக பொலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தன.

குறிப்பாக அந்த சாலை வழியாக செல்லும் கணவன் மனைவி மற்றும் காதல் ஜோடிகளை கொள்ளையர்கள் இலக்காக குறி வைத்து அவர்களை வழி மறித்து மிரட்டி நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து வருவதாகவும் புகார்கள் வந்ததால், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் கொள்ளையர்கள் முக முடி அணிந்திருந்ததால், அவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பொலிசாருக்கு சிரமமாக இருந்ததால், பொலிசார் கொள்ளையர்களை பிடிப்பது சவலாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சையைச் சேர்ந்த கெல்வின் என்ற இன்ஜினீயரை வழிமறித்து இந்தக் கொள்ளைக் கும்பல் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

இதனால் இது குறித்து வல்லம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பலைப் பிடிக்கும் பணியில் பொலிசார் தீவிரவமாக ஈடுபட்ட போது, அந்த வழியாக இரண்டு சக்கரவாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தனர்.

அந்த நபர் பொலிசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின்னுமாக பதில் அளித்ததால், அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த நபர் அளித்த வாக்குமூலம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் பெயர் ரமேஷ், நான், எனது நண்பர்கள் மூன்று பேர் தினமும் பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலைப் பகுதிக்கு இரவு 7 மணிக்கு வந்து விடுவோம். இரவு 10 மணி வரை இருட்டான அந்தப் பகுதியில் மறைந்து நின்று கொண்டு அந்த வழியாக இருசக்கரத்தில் வருபவர்களை முகமூடி அணிந்து கொண்டு வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்து விடுவோம்.

அதுமட்டுமின்றி தஞ்சைப் பகுதியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலை நேரத்திற்கு மேல் தங்களது காதலிகளை அழைத்துக் கொண்டு இந்த பகுதி வழியே வருவர், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நானும் எனது நண்பர்களும் காதல் ஜோடிகளிடம் சென்று மிரட்டி பணம், நகைகளை பறித்து கொள்வோம்.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் போது நாங்கள் போதையில்தான் இருப்போம். அதனால் எதையும் தைரியமாகச் செய்வோம். யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள் நிச்சயம் புகார் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று பெரும்பாலும் அவர்களை குறி வைத்தே தாக்குவோம்.

அப்போது பல தடவை கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறோம். மேலும் பணம் நகை பறிப்போமே தவிர செல்போன்களைப் பறிக்க மாட்டோம். ஏன் என்றால் செல்லைப் பறித்தால் அதை வைத்து எங்களை ஈஸியாகப் பிடித்து விடுவீர்கள் என்பதால் பறிக்கவில்லை, கொள்ளையடித்த நகைகளை வங்கியில் அடகு வைத்து ஜாலியாக இருப்போம் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்