திருமணம் ஆகாத எனக்கு குழந்தை... காதலன் இறந்துட்டான்! இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்

Report Print Santhan in தெற்காசியா

கேரளாவில் குழந்தையின் சடலத்தை பையில் மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் பொலிசாரிடம் சிக்கிய பெண், அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், கடந்த புதன்கிழமை தன்னுடைய கல்லூரி தோழியை தொடர்பு கொண்டு நான் பேக்கில் இறந்த குழந்தையின் சடலத்தை வைத்து கொண்டு சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அந்த குழந்தையின் உடலை புதைப்பதற்கு உன்னுடைய உதவி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

முதலில் நம்பாத அந்த தோழி, வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பும் படி கூற, அதன் பின் புகைப்படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பின் குடும்பத்தினர் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார், குழந்தையை கைப்பற்றியதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்ததாகவும் இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பம் ஆனதாகவும், காதலன் தற்கொலை செய்துகொண்டதால் கர்ப்பம் ஆனதை வீட்டில் மறைத்தாகவும், அதன் பின் குழந்தை இறந்து பிறந்ததால், அதை மறைத்து பேக்கில் வைத்து சுற்றி வந்தேன் என்று கூறினார்.

ஆனால் பொலிசாருக்கு அவர் கூறியதில் நம்பிக்கை இல்லாததால், குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் பால் இருந்ததும், மூச்சுத் திணறி உயிரிழந்தும் தெரியவந்துள்ளது.

அதில், குழந்தையின் கழுத்தை நெறித்ததற்கான அடையாளமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால், மீண்டும் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் சொன்ன தகவல் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாத எனக்குக் குழந்தை பிறந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே குழந்தையைக் கொலை செய்தேன். குழந்தை பிறந்த பிறகு பால் கொடுத்துவிட்டு துணியால் இறுக்கிக் கொன்றேன்.

அதன் பின், இரவு நேரத்தில் எங்காவது குழந்தையை வீசிவிடலாம் என்று நினைத்து பேக்கில் வைத்தேன். இதற்காக நண்பரின் உதவியைக் கேட்டேன், இப்படி மாட்டிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் குறித்த பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த காதலன் 2 மாதங்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவதால், பொலிசார் இந்த சம்பவத்தில் தொடர் விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்