பாத்திரம் கழுவும் வேலை செய்து கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டு வந்த கோடீஸ்வரரின் மகன்.. தலைசுற்ற வைத்த காரணம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கோடீஸ்வரரின் 19 வயது மகன் வீட்டை விட்டு ஓடி போய் பாத்திரம் கழுவும் வேலை செய்து கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது அவரை பொலிசார் கண்டுபிடித்துள்ளது குடும்பத்தாரை நிம்மதியடைய செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் வடோதராவை சேர்ந்த கோடீஸ்வர் ஒருவரின் மகன் துவாரகேஷ் தக்கர் (19). கல்லூரியில் படித்து வந்த இவருக்கு கல்வி மீது நாட்டமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி ரூ.2500-ஐ எடுத்து கொண்டு வீட்டிலிருந்து துவாரகேஷ் மாயமானார்.

பெற்றோர் அவரை பல இடங்களில் பொலிசார் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் உள்ள ஒரு பெரிய ஹொட்டலுக்கு சென்ற துவாரகேஷ் அங்கிருந்த மேலாளரிடம் தனக்கு எதாவது வேலை கொடுங்கள் என கேட்டார்.

ஆனால் துவாரகேஷின் பால் வடியும் குழந்தை முகமும், அவரின் தோற்றமும் மேலாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

அந்த சமயத்தில் குஜராத்தை சேர்ந்த இரு பொலிசார் சிம்லாவின் சுற்றுலாவுக்கு வந்த நிலையில் அவர்களுக்கு இது குறித்து தகவல் வந்தது.

பின்னர் துவாரகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டை விட்டு ஓடி வந்த அவர் சாலையோரம் உள்ள உணவு கடைகளில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வந்ததும், அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், அந்த வேலையை விட்டு நின்ற பின்னர் ஹொட்டலில் வேலை தேடி அவர் வந்திருந்ததும் உறுதியானது.

கல்லூரி மற்றும் படிப்பின் மீது விருப்பமில்லாததாலும், தனது திறமையை நிரூபிக்க நினைத்ததாலும் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

துவாரகேஷ் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அவர் பெற்றோருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் உடனடியாக சிம்லாவுக்கு வந்த அவர்கள் மகனை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டனர்.

துவாரகேஷ் கிடைத்தது நிம்மதியளிக்கிறது, அவன் இல்லாமல் இத்தனை நாட்கள் மிகவும் சிரமப்பட்டோம் என அவரின் மாமா கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்