விமானத்தில் பயணி கண்ட காட்சி... என்ன நடந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் பயணிகள் விமானத்தில் இருக்கையில் அருகே இருக்கும் கண்ணாடி உடைந்திருந்ததால், அதை பயணி ஒருவர் புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருப்பது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hariharan Sankaran என்பவர் கடந்த 5-ஆம் திகதி மும்பையிலிருந்து, டெல்லிக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் குறித்த விமானத்தில் இருக்கையின் அருகே இருக்கும் கண்ணாடி உடைந்து நிலையில் இருந்துள்ளது. இதனால் அவர் நான் குறித்த விமானத்தில் உள்ளே இருந்த போது, ஜன்னல் உடைக்கப்பட்டு, அது பிளாஸ்டிக் டேப்புகளால் ஓட்டப்பட்டுள்ளது.

இதைய யாராவது கவனீத்தீர்களா? இது பாதுகாப்பா? என்று குறிப்பிட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக இது குறித்து விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமை என்று தெரிவித்துள்ளது.

மேலும் விமானம் மேலே செல்லும் போது காற்றின் அழுத்ததினால், இப்படி இருக்கும் போது, அது உடைய நேரிடலாம்? இதனால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் குறித்த விமானத்தில் உடைந்ததாக கூறப்பட்ட ஜன்னலின் உட்புறம் தான் உடைந்து டேப்பால் ஓட்டப்பட்டிருந்தது, வெளிப்பகுதி உடையவில்லை என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்