பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நரேந்திர மோடி நன்றி

Report Print Basu in தெற்காசியா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் சட்டப்பிரிவு 377-ஐ மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்த நாள் முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில் நவம்பர் 9ம் திகதி பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித தளத்திற்கு செல்லும் இந்தியாவின் எல்லை வழி பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசி மோடி, இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள தங்கள் மதத்தின் புனிதமான தளங்களில் ஒன்றைப் பார்வையிட அனுமதியளித்து, இலவச விசா பயணத்திற்கு ‘ஒத்துழைப்பு’ வழங்கியதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவின் உணர்வுகளை மதித்த ஒத்துழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் நன்றி கூறுகிறேன என்று மோடி தெரிவித்தார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்