பாத்திரம் கழுவும் வேலை செய்து நடைபாதையில் தங்கிய கோடீஸ்வரரின் 19 வயது மகன்! அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் தன்னுடைய மதிப்பு மற்றும் திறமையை நிரூபிக்க வீட்டை விட்டு வெளியேறி பாத்திரம் கழுவும் வேலை செய்து வந்த கோடீஸ்வரரின் மகனின் திறமையை ஊக்குவிக்க மகேந்திர நிறுவனத்தின் தலைவர் முன் வந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகன் துவாரகேஷ் தக்கர் (19). கல்லூரியில் படித்து வந்த இவருக்கு அதன் மீது நாட்டமில்லாமல் இருந்தது.

மேலும் சொந்தக்காலில் நின்று தனது மதிப்பையும், திறமையையும் பெற்றோர் உள்ளிட்ட அனைவரிடமும் நிரூபிக்க விரும்பிய துவாரகேஷ் வீட்டை விட்டு கடந்த மாதம் வெளியேறினார்.

வெறும் ரூ 2500 பணத்துடன் வெளியேறிய அவர் சிம்லாவில் உள்ள ஹொட்டல்களில் பாத்திரம் கழுவி, கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டு நடைபாதையில் உறங்கி வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் துவாரகேஷை கண்டுபிடித்து அவர் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பெரும் கோடீஸ்வரரின் மகனான துவாரகேஷ் இந்த வயதிலேயே தனது தனித்திறமையை நிரூபிக்க நினைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில் அவருக்கு உதவ மகேந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் முன் வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், துவாரகேஷை நான் மதிக்கிறேன், தன் சொந்த காலில் ஜெயிக்க அவர் ஆசைப்படுகிறார்.

பிற்காலத்தில் அவர் வெற்றிகரமான தொழிலதிபராக வரலாம், அவருக்கு மகேந்திரா நிறுவனத்தில் தொழில் மற்றும் வேலைபயிற்சி அளிக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறையில் மிக பெரிய ஜாம்பவானான ஆனந்த் மகேந்திரா இந்த பெரும் வாய்ப்பை துவாரகேஷுக்கு வழங்கியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்