நடுவானில் தவித்த இந்திய விமானம்! 150 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி

Report Print Fathima Fathima in தெற்காசியா
173Shares

நடுவானில் இந்திய விமானம் பறந்து கொண்டிருந்த போது வானிலை மோசமடைந்ததால் தவித்த விமானிக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவி செய்துள்ளனர்.

கடந்த 14ம் திகதி ஜெய்ப்பூரில் இருந்து 150 பயணிகளுடன் ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு இந்திய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது வானிலை மோசமடைந்தது, அத்துடன் விமானத்தை செலுத்த முடியாமல் விமானி தவித்துக் கொண்டிருந்த போது மின்னல் ஒன்றும் தாக்கியதால் 36,000 அடியிலிருந்து 34,000 அடிக்கு கீழ் இறங்கியது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு அறைக்கு அபாய சிக்னலை கொடுத்ததும், நிலையை புரிந்து கொண்ட அதிகாரிகள் இந்திய விமானம் பத்திரமாக கடக்க உதவி செய்தனர்.

இத்தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்