திருமணமான இரண்டாவது நாளில் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணமான அடுத்தநாளே புதுப்பெண் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பர்மர் மாவட்டத்தில் உள்ள ரனசர் கல்ல கிராமத்தை சேந்த இளம்பெண்ணுக்கும், நபர் ஒருவருக்கும் கடந்த 20ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான அடுத்தநாளே அந்த புதுப்பெண் அங்குள்ள பெரிய தண்ணீர் தொட்டிக்குள் குதித்துள்ளார்.

இதையடுத்து பரிதாபமாக புதுப்பெண் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் புதுப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தகவலை பொலிசார் நேற்று தான் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் விரைவில் அது தொடர்பில் பொலிசார் தகவல் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்