சீனாவிற்கு கடத்தப்பட்ட 629 பெண்கள்.... இருநாடுகளிடையே விரிசல் ஏற்படும் அச்சத்தில் தவிற்கும் அரசு!

Report Print Abisha in தெற்காசியா
175Shares

பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்களை சீனர்கள் கடத்தி சென்றுவிட்டதாக associated press ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்:

பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப்பெண்கள் சீனர்களுக்கு மண முடித்து வைக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றனது.

அந்த பெண்கள் சீனர்களின் மனைவிகளாக சீனா அழைத்து செல்லப்பட்டாலும், அங்கு பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கடத்தப்படும் பெண்கள் தங்கள் பெற்றோரை அழைத்து மீட்குமாறு கெஞ்சுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய கடத்தலை தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன்விசாரணையில், 629 பெண்கள் சீனர்களுக்கு மணமுடிக்கப்பட்டு கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் சீனாவுடனான நட்புறவில், விரிசல் ஏற்படும் என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக தன்னார்வலர்கள் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பெண்கள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்படும் ஏராளமான சீனா்கள் பின்னா் விடுவிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

associated pressவெளியிட்ட செய்தியில், சட்டபடி திருமணம் செய்து கொண்டு அழைத்து செல்லப்படும் பெண்கள் எதேனும், சித்தரவதை அனுபவித்தாலும் பாகிஸ்தான் சட்டம் எதுவும் செய்யாது என்று சீன இளைஞர்கள் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்