முகூர்த்த நேரத்தில் திருமண மண்டபத்துக்கு வராத மணமகன் செய்த எதிர்பாராத செயல்! பின்னர் நடந்த நிகழ்வு

Report Print Raju Raju in தெற்காசியா
170Shares

இந்தியாவில் தனது சொந்த திருமணத்தை நிறுத்திவிட்டு மணமகன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மஹோட்பா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் கலந்து கொண்டார். அப்போது குதிரை மீது உட்கார்ந்து ஊர்வலாக அவர் வந்தார்.

திருமண மண்டபம் நோக்கி மணமகன் வந்து கொண்டிருந்த போது பெரிய கும்பல் ஒரு இடத்தில் அமர்ந்து உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடுவதை அவர் பார்த்தார்.

உடனே அங்கு சென்று விசாரித்த போது இந்த மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கக்கோரி போராட்டம் நடத்தப்படுவதாக அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மணமகன் திருமண மூகூர்த்த நேரம் கடப்பதை பற்றிக் கூட கவலைப்படாமல் அந்த உண்ணாவிரதத்தில் தானும் பங்கேற்றார்.

இது மணப்பெண் வீட்டாரை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால் ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி திருமணம் நடக்கும் இடத்துக்கு மணமகன் வந்தார்.

பின்னர் மணப்பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்