பிரியங்கா வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட கொடூரன்கள்! பாலியல் குற்றவாளிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி

Report Print Raju Raju in தெற்காசியா
618Shares

பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் கருணை மனு அளிக்க உரிமை கிடையாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதில் கைதான நால்வரும் இன்று அதிகாலை தப்பியோட முயற்சித்ததாக கூறி என் கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பெண்கள் பாதுகாப்பு என்பது தீவிரமான பிரச்னையாக உள்ளது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்து கருணை மனு அளிக்க சட்டத்தில் உரிமை கொடுக்கக்கூடாது.

இது தொடர்பிலான கருணை மனுக்களை நாடாளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கூறினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்காவின் வழக்கில் கைதானவர்கள் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து ஜனாதிபதி இவ்வாறு பேசியுள்ளார்.

பலாத்கார குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்யும் விதத்தில் அவர் பேசிய பேச்சுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்