சாலையில் சென்று கொண்டிருந்த தம்பதி உயிரோடு தாதுப்பொருட்களில் புதைந்த பயங்கரம்! திக் திக் நிமிடங்கள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் லொறியில் இருந்து கொட்டிய ரசாயனம் கலந்த தாதுப்பொருட்ளில் தம்பதி அப்படியே புதைத்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் தலஞ்சனா கிராமத்தை சேர்ந்த தம்பதி இரு தினங்களுக்கு முன்னர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அருகில் ஒரு பெரிய லொறி வந்து கொண்டிருந்த போது அதில் ரசாயனம் கலந்த தாதுபொருட்கள் நிரப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் லொறி, பைக் மீது உரசியதால் அதில் இருந்த தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதையடுத்து லொறியில் இருந்த தாதுப்பொருட்கள் தம்பதி மீது அப்படியே கொட்டியதில் அதன் உள்ளே இருவரும் புதைந்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் தம்பதியின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தற்போதும் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.

இதனிடையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தப்பியோடிய லொறி ஓட்டுனரை தேடி வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...