பேருந்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வேன்: உடல் கருகி பலியான மொத்த பயணிகள்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 15 பயணிகள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை குறித்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஜாப் மாவட்டத்தின் கான் மெஹ்தர்சாய் பகுதியில் சாரதியின் கட்டுப்பட்டை இழந்த வேன் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த வேனில் ஈரான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட எண்ணெய் இருந்துள்ளதகா கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் நெருப்பு பற்றிக்கொண்டுள்ளது.

இதில் பேருந்தும் வேனும் மொத்தமாக எரிந்து சேதமாகியுள்ளது. 44 இருக்கைகள் கொண்ட பயணிகள் பேருந்தானது சம்பவம் நடந்த வேளையில் 14 பயணிகளுடன் Quetta பகுதிக்கு பயணப்பட்டதாக கூறப்படுகிறது.

வேனில் இருந்த இருவரும், பேருந்தில் பயணப்பட்டவர்களில் 13 பேரும் அடையாளம் தெரியாத வகையில் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

தீயில் இருந்து உயிர் தப்ப பேருந்தில் இருந்து வெளியே குதித்த நபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த மர்ம வேன் மற்றும் கடத்தல் ஈரானிய எண்ணெய் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்