நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட போது நான் சிறுவன்! மரண தண்டனை வேண்டாம்: மனு தள்ளுபடி

Report Print Raju Raju in தெற்காசியா

நிர்பயா கொலை செய்யப்பட்ட போது தாம் சிறுவனாக இருந்ததாக குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் புதிய மனுதாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனால் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா புதிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் குற்றம் புரிந்த போது எனக்கு 18 வயது நிரம்பவில்லை. விசாரணை அதிகாரிகள் எனக்கு எலும்பு தொடர்பான பரிசோதனை நடத்தவில்லை

ஆதலால் எனக்கு தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. தம்மை சிறுவர் நீதி சட்டத்தின் படிதான் நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். பவன் குமாரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அத்தகையவர்களுக்கு பாடம் கற்பிப்பது மிகவும் முக்கியம். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...