வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு மூச்சு வாங்க ஓடி வந்த மணமகன்! அதிர்ந்த மக்கள்... பின்னர் வெளியான உண்மை

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணம் நடக்கும் மண்டபத்தை நோக்கி 11 கிலோ மீற்றர் மணமகன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அது தொடர்பிலான பின்னணி தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோரை சேர்ந்தவர் நீரஜ் மால்வியா.

இவருக்கு நேற்று திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது வீட்டிலிருந்து திருமண மண்டபத்துக்கு 11 கிலோ மீற்றர் உள்ள நிலையில் மணமகன் நீரஜ் மண்டபத்துக்கு ஓடினார்.

அவரை பின் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் ஓடினார்கள்.

சாலையில் இதை பார்த்தவர்கள் நீரஜ் எதையோ திருடி கொண்டு ஓடுவதாக நினைத்தனர். ஆனால் பின்னர் தான் இது தொடர்பிலான உண்மை தெரியவந்துள்ளது.

உடற்பயிற்சி பயிற்சியாளரான நீரஜ் அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜாக்கிங் போல ஓடியுள்ளார்.

பின்னர் மண்டபத்துக்கு வந்து மணமகளை அவர் திருமணம் செய்தார்.

இது குறித்து மணமகனின் மாமனார் கூறுகையில், என் மாப்பிள்ளையை நினைத்தால் பெருமையாக உள்ளது, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளவே அவர் இப்படி செய்தார் என கூறினார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்