பெண்ணின் தலைக்குள் 9 செண்டி மீற்றர் ஆழத்தில் இருந்த பொருள்! மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய X-ray புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெண்ணின் தலைக்குள் 9 செண்டி மீற்றர் ஆழத்துக்குள் சென்ற அரிவாளை மருத்துவர்கள் சாமர்த்தியாக வெளியில் எடுத்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அசோலி கிராமத்தை சேர்ந்தவர் மீரா பாய் (65). இவர் தனது வீட்டில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மீராவின் வலது கண் வழியாக தலைக்குள் அரிவாளை கொண்டு வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டான்.

மீராவின் தலைக்குள் அரிவாள் சென்ற நிலையில் வலியால் அவர் கதறினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் தலையை ஸ்கேன் மற்றும் x ray செய்து பார்த்த போது அரிவாள் 9 செண்டி மீட்டர் ஆழத்துக்குள் சென்றதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மருத்துவர் பவித்ரா தலைமையில் 5 மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு அரிவாளை வெளியில் எடுத்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்தது.

ஏனெனில் அரிவாளை வெளியில் எடுத்த பின்னரும் அதிகளவு இரத்த போக்கு ஏற்பட்டது.

நல்லவேளையாக மூளைக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்படவில்லை, மீராவின் வலது கண்ணில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்