சகோதரர் சடலத்தை பெற மூன்று நாட்களாக பிணவறை அருகே காத்திருக்கும் இளைஞன்! பரிதாபமாக நிற்கும் புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா

டெல்லியில் குடியுரிமை சட்டம் தொடர்பில் நடந்த கலவரத்தில் உயிரிழந்த தனது சகோதரரின் சடலத்தை பெற முடியாமல் இளைஞர் மூன்று நாட்களாக தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே டெல்லியில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் சுமார் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரத்தில் ஷாயித் என்ற இளைஞரும் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார்.

அவரின் சடலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஷாயித்தின் சடலத்தை பெற அவர் சகோதரர் இர்பான் மருத்துவமனையில் மூன்று நாட்களாக காத்திருந்தும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இது தொடர்பாக இர்பான் கூறுகையில், வேண்டுமென்றே சடலத்தை கொடுக்க மறுக்கிறார்கள், பிணவறை அதிகாரி ரூ 4000 பணம் கேட்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இர்பான் பரிதாபமாக மருத்துவமனையின் பிணவறை அருகே நிற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் பொலிசார் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்