தொடர்ந்து இருமிய புதுப்பெண்! கொரோனா இருப்பதாக கருதி கணவர் மற்றும் மாமனார் செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in தெற்காசியா
#S

இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக கருதி அவரை தனியறையில் அடைத்து வைத்து பல்வேறு கொடுமைகளை செய்த கணவர் குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ஜெயந்த் என்ற நபருக்கும் கடந்த 2ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பூஜா பெற்றோர் ஜெயந்துக்கு ரூ 2.5 லட்சம் பணம், நகைகள், பைக் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர்.

ஆனால் மேலும் ரூ 2 லட்சம் கேட்டு பூஜாவை கணவர் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்த தொடங்கினர். இந்நிலையில் பூஜா சில நாட்களாக தொடர் இருமல் மற்றும் தும்மலால் அவதிக்கப்பட்டார்.

இதையடுத்து பூஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை தனியறையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருவதாக கூறி தனது வீட்டுக்கு வந்த பூஜா நடந்தவற்றை கூறி அழுதார்.

இதையடுத்து பொலிசில் ஜெயந்த் மற்றும் அவர் தந்தை மீது புகார் கொடுக்கப்பட இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்