கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மோடி மாதிரி என்னால் செயல்பட முடியாது! பாகிஸ்தான் பிரதமர் வேதனை

Report Print Raju Raju in தெற்காசியா

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கராச்சியில் 123 பேருக்கும் சுக்குர் பகுதியில் 210 பேருக்கும் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது. சிந்து மாகாணத்தில் மட்டும் 41 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போன்றோர் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம்.

ஆனால் அதே சமயம் என்னால் முடியாது. அவ்வாறு அறிவித்தால் எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடும். எங்களது நாட்டிலும் கொரோனாவின் மரணப்பிடியில் மக்கள் அல்லல்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே இம்ரான்கான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாகிஸ்தானில் 25 சதவீத மக்கள் தினக்கூலியை நம்பி இருப்பதாகவும் எனவே பாகிஸ்தானில் முழு அடைப்பு சாத்தியமில்லை என்றும் தெரிவித்ததோடு நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுவதாகவும் முழு அடைப்பால் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்றும் மக்களின் துன்பத்தை குறைப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகத்தில் இருந்து விலகுதல், சுயமாக தனித்திருத்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்துதல் முறைகளை வரவேற்பதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்