நீ கொரோனா வைரஸ்! சீனப்பெண் போலவே முகம் கொண்ட பெண் மீது இனவெறி தாக்குதல்.. சிசிடிவியால் சிக்கிய நபர்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் இளம்பெண் மீது இனவெறி தாக்குதல் நடத்தி கொரோனா வைரஸ் என கத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளதோடு அவரின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் அங்குள்ள மார்க்கெட்டில் இருந்த போது நபர் ஒருவர் அவர் அருகில் வந்து முகத்திலும் உடை மீதும் எச்சில் மற்றும் புகையிலையை துப்பியுள்ளார்.

மேலும் அப்பெண்ணை பார்த்து நீ கொரோனா வைரஸ், சீனா கொரோனா வைரஸ் வருகிறது என இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், ஏனெனில் வடகிழக்கும் பெண்களின் முகம் சீனப்பெண்களின் முகம் போலவே அமைப்பை கொண்டதால் அவ்வாறு அவர் செய்திருக்கிறார்.

இதையடுத்து அப்பெண் புகையிலை துப்பப்பட்ட உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்த நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சியை வைத்து இனவெறி தாக்குதல் நடத்திய கவுரவ் வோரா (40) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

முதலில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கவுரவ் மறுத்த நிலையில் பின்னர் ஒத்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்