தாலிகட்டும் சமயத்தில் மாப்பிள்ளையின் நண்பரை தான் திருமணம் செய்வேன் என அடம்பிடித்த மணப்பெண்! பின்னர் நடந்தது என்ன?

Report Print Raju Raju in தெற்காசியா
6811Shares

இந்தியாவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையின் நண்பரை தான் திருமணம் செய்து கொள்வேன் என மணப்பெண் அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடக்கவிருந்தது.

அப்போது தாலிகட்டும் நேரத்தில் மணமகனுக்கு பதிலாக அவர் நண்பரை மணக்க விரும்புவதாக மணப்பெண் கூறி அதிரவைத்தார்.

இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல் சென்றது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மணப்பெண்ணிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், எனக்கு மாப்பிள்ளையின் நண்பருடன் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, அவருடன் தான் போனில் பேசினேன் என குழப்பினார்.

இதன் பின்னர் மணப்பெண்ணுடன் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தி மனதை மாற்றிய நிலையில் மணமகனையே அவர் மணக்க சம்மதித்தார்.

இதையடுத்து எந்த பிரச்சனையும் இன்றி இருவருக்கும் திருமணம் நடந்தது.

பொலிசார் கூறுகையில், மணமகள் மற்றும் குடும்பத்தார் இடையில் தான் சில குழப்பங்கள் இருந்தன. உரையாடலுக்குப் பிறகு அந்த குழப்பம் நீங்கியது. இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்