விரைவு ரயிலுடன் மோதி சுக்கலான வேன்: ஒரே குடும்பத்து யாத்ரீகர்கள் பலர் உடல் நசுங்கி பலி

Report Print Arbin Arbin in தெற்காசியா

வடகிழக்கு பாகிஸ்தானில் சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற வேனில் ரயில் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷேகுபுரா பகுதியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. கராச்சி-லாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சீக்கிய மதத்தின் முக்கிய தலங்களில் ஒன்றான நங்கனாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய வேனில் 25-26 பேர் பயணம் செய்ததாக ஷேகுபுரா பொலிசார் தெரிவித்துள்ளனர், மேலும் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் கராச்சி-ராவல்பிண்டி ரயில் ஒன்று பயணத்தின்போது தீப்பிடித்து 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் 100-கும் அதிகமான ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்