15 மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தை: சீனா- இந்தியா எல்லை தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Report Print Fathima Fathima in தெற்காசியா

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சனை தொடர்பில் சுமார் 15 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் சுமார் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், சீன வீரர்களும் உயிரிழந்தனர் என கூறப்பட்ட நிலையில் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 5ம் திகதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக படைகள் விலக்கப்பட்ட சமயத்தில் பாங்கோங் த்சோ ஏரி அருகே அமைந்துள்ள ஃபிங்கர் - 4, ஃபிங்கர்- 5 ஆகிய பகுதிகளிலிருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன, தொடர்ந்து இந்திய படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சூஷுல் எல்லைச் சாவடியில் நேற்று இந்திய மற்றும் சீன ராணுவத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று செவ்வாயன்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்ததாக ANI தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பகுதிகளில் இருநாட்டு ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்