இந்தியாவில் 4 அடுக்குமாடி வீடுகளுக்கு உரிமையாளராக இருந்தும் பிச்சை எடுத்து வந்த பெண்ணை அவரின் மருமகள் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மும்பையில் வசிப்பவர் சஞ்சனா (70). இவர் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் தினேஷ் என்பவரை தத்தெடுத்து மகனாக வளர்த்து வந்தனர்.
இதையடுத்து சஞ்சனா, தினேஷ் மற்றும் அவரின் மனைவி அஞ்சனா ஆகியோர் அடுக்கு மாடி வீட்டில் வசித்து வந்தனர்.
சஞ்சனாவுக்கு 4 சொந்தமான அடுக்குமாடி வீடுகள் இருந்தும் அவர் கோயிலில் பிச்சை எடுத்து வந்தார்.
இந்த சூழலில் சஞ்சனா உயிருக்கு போராடிய நிலையில் அஞ்சனாவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தனது மாமியார், கழிப்பறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக மருத்துவர்களிடம் அஞ்சனா கூறினார்.
ஆனால் உடலில் பல இடங்களில் காயங்கள் எற்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அதற்குள் சஞ்சனா இறந்துவிட்டார், சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அஞ்சனாவிடம் விசாரித்த போது மாமியாரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
பொலிசார் கூறுகையில், சஞ்சனா தினமும் பணத்தை வீட்டில் மறைத்துவிட்டு அதை மறந்துவிடுவார், பின்னர் அது குறித்து அஞ்சனாவிடம் கேட்பார்.
இது தொடர்பில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
மேலும், 4 அடுக்குமாடி வீடுகளை தன் பெயரில் எழுதி கொடுக்குமாறு மாமியார் சஞ்சனாவிடம், அஞ்சனா அடிக்கடி வற்புறுத்தினார்.
சம்பவத்தன்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அஞ்சனா மாமியார் சஞ்சனாவை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார்.
அதில் அவர் இறக்காததால் மாமியாரின் பாவடை நாடாவை எடுத்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றும் முடியவில்லை,
இதையடுத்து செல்போன் சார்ஜரை எடுத்து கழுத்தை நெரித்துள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்கு மாமியாரை கொண்டு வந்து கீழே விழுந்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதோடு அஞ்சனாவின் உள்ளாடையில் மாமியார் சஞ்சனாவின் நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அஞ்சனாவிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.