கணவர் சம்மதத்துடன் மனைவிக்கு வேறு நபருடன் நடைபெற்ற திருமணம்! தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணமான பெண்ணை அவரின் கணவர் சம்மதத்துடன் வேறு நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலத்தின் தட்ஜேசி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் புதுமாப்பிள்ளை வேறு ஊரில் பணிக்கு சென்றுவிட்டார்.

அவரின் மனைவி திருமணத்துக்கு முன்னரே கரம் பஸ்வன் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார்.

சமீபத்தில் பஸ்வன், அப்பெண் வீட்டுக்கு வந்துள்ளார், இருவரும் தனிமையில் இருப்பதை பெண்ணின் குடும்பத்தார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த புகார் கிராம பஞ்சாயத்துக்கு போனது.

அப்போது பேசிய பஸ்வன், நானும் அவளும் வருடக்கணக்கில் தீவிரமாக காதலிக்கிறோம், ஆனால் வேறு நபரை அவருக்கு திருமணம் செய்துவிட்டனர் என கூறினார்.

இதையெல்லாம் கேட்டறிந்த பஞ்சாயத்துக்கு தலைவர்கள் அப்பெண்ணின் கணவருக்கு போன் செய்து இது குறித்து தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவரின் சம்மதத்தோடு பஸ்வனுக்கு அப்பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பின்னர் பஸ்வன் மனைவியை தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் கூறுகையில், எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை, ஊர் பஞ்சாயத்து தலைவர்களே இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

ஆனாலும் இது குறித்து விசாரிப்போம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்