மகளை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்கு வந்த போது மூடியிருந்த கதவு! உடைத்து பார்த்த தந்தைக்கு அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்

Report Print Raju Raju in தெற்காசியா
1299Shares

இந்தியாவில் காவலரும் அவர் மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் பரத் ஜாதவ் (27). இவர் மனைவி ஜக்ருதி (23). இவர்களுக்கு 4 மாத குழந்தை உள்ளது.

காவலராக பணிபுரிந்து வந்த பரத் நேற்று மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் வெளியில் செல்லவில்லை, பரத்தின் மாமனார் ரமேஷ் தனது மாப்பிள்ளைக்கும், மகளுக்கும் பலமுறை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை. இதன்பிறகு இரவு 10 மணிக்கு ரமேஷ், பரத் வீட்டுக்கு வந்தார்.

கதவு திறக்கப்படாததால் அதை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகளும், மாப்பிள்ளையும் தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்து மயக்கமடையும் நிலைக்கே ரமேஷ் சென்றுவிட்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது நிலைமையை உணர்ந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இரண்டு சடலங்களையும் கைப்பற்றினார்கள்.

பொலிசார் கூறுகையில், பரத் மற்றும் ஜக்ருதி தம்பதி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று மாலை 4 மணியளவில் கூட வாட்ஸ் அப்பில் பாடல்களை ஸ்டேட்டஸாக பரத் வைத்திருந்தார்.

கடிதம் எதுவும் வீட்டில் சிக்காததால் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, தொடர்ந்து அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்