திருமணமான 2 மணி நேரத்தில் மனைவி பற்றி அறிந்து அதிர்ச்சியில் உறைந்த கணவன்! தலைசுற்ற வைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா
5401Shares

இந்தியாவில் திருமணமான 2 மணி நேரத்தில் துப்பாக்கி முனையில் புதுப்பெண் கடத்தி செல்லப்பட்ட நிலையில் அது அவரே நடத்திய நாடகம் என்பதை அறிந்த கணவன் அதிர்ச்சியடைந்தார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோம்பிர் சிங் என்பவருக்கு மம்தா என்ற இளம் பெண்ணுக்கு திங்கட்கிழமை காலையில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் காரில் தம்பதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் சோம்பிர் காரை வழிமறித்தது.

பின்னர் துப்பாக்கி முனையில் புதுப்பெண் மம்தாவை அவர்கள் கடத்தி சென்றனர். இதன் பிறகு அந்த கார் நேராக மம்தாவின் அத்தை வீட்டுக்கு சென்றது.

மம்தா நான்கு இளைஞர்களுடன் சேர்ந்து வருவதை பார்த்த அத்தை அவரிடம் விசாரித்தார்.

அப்போது தான் மம்தாவே இந்த கடத்தல் நாடகத்தை போட்டது தெரியவந்தது.

அதாவது மம்தா சாஹில் குமார் என்பவரை காதலித்து வந்தார், அவர் விருப்பத்தை மீறி சோம்பிருடன் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து காதலனை வைத்தே இந்த கடத்தல் நாடகத்தை மம்தா போட்டுள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த சோம்பிர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் மம்தாவை கைது செய்தனர்.

மேலும் அவரின் காதலன் மற்றும் நண்பர்களை தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்