மசாஜ் செண்டர் பெயரில் பெண்களை வைத்து நடந்த மோசடி தொழில்! அங்கு சென்று பார்த்த பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் என்னும் போர்வையில் பெண்களை வைத்து தவறான தொழில் நடந்த வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லியின் திலக் நகர் பகுதியில் இப்படியொரு மசாஜ் செண்டரை மகளிர் ஆணைய நிர்வாகிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் தலைமையில் சிலர் உடன் சென்று அந்த ஸ்பா சென்டரை ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து, பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும், புறக்கணிக்கப்பட்ட சில பொருட்களையும் குழு கண்டெடுத்தது.

முன்னதாக, மகளிர் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், ஸ்பா சென்டர் என்ற பெயரில் தவறான தொழில் நடப்பதாகவும், ஊரடங்கு காலங்களிலும் அது இயங்கியதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் அங்கு சென்ற போது, பல வாடிக்கையாளர்கள் அங்கு காத்திருந்தனர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின், அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் மூலம் ஸ்பாவின் உரிமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவருக்கு அங்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததால் தனது செல்போனை உரிமையாளர் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். மேலும், அங்கு பணிபுரியும் பெண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்வாதி மலிவால் கூறுகையில், 'ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து தவறான தொழில் நடப்பதாக வந்த தகவலின் படி, இங்கு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மத்திய அரசின் அறிவிப்பு படி, ஸ்பா செயல்படக்கூடாது என அறிவுறுத்தியும் இவர்கள் எப்படி செயல்பட்டனர் என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்