வீட்டிலிருந்து வெளியேறி வேறு நபருடன் வசித்து வந்த திருநங்கை! இரத்தவெள்ளத்தில் உயிரிழந்தது எப்படி? அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெற்றோரை சிறுவயதிலேயே பிரிந்து வேறு ஊரில் வசித்து வந்த திருநங்கை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்டை பூர்வீகமாக கொண்டவர் எக்டா ஜோஷி. இவர் இளம் வயதிலேயே தன்னை திருநங்கையாக உணர்ந்த நிலையில் பெற்றோரை பிரிந்து டெல்லிக்கு வந்தார்.

அங்கு மற்றொரு திருநங்கையான அனிதா என்பவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காரில் வெளியில் சென்றுவிட்டு அனிதாவுடன் ஜோஷி வீடு திரும்பினார். அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஜோஷியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ஹெல்மட் அணிந்திருந்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்ததில் இரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த ஜோஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், தான் வசித்து வந்த பகுதியில் ஜோஷி மிகவும் பிரபலமாக இருந்தார்.

அவர் அதிகளவில் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார், முக்கியமாக சக திருநங்கைகளுக்கு உதவி செய்து வந்தார்.

இந்த கொலை தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்துள்ளது, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்