வாய்க்குள் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்ட திருமணமான இளம்பெண்! வெளிவந்த பகீர் பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா
7788Shares

இந்தியாவில் இளம்பெண் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகாரையடுத்து பொலிசார் அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. திருமணமான இளம்பெண்ணான இவர் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இதையடுத்து கல்பனா மரணத்துக்கு அவர் கணவர் குடும்பத்தார் தான் காரணம் என அவர் சகோதரர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2018ல் என் சகோதரி கல்பனாவுக்கும், விக்ராந்த் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் விக்ராந்த் மற்றும் அவர் பெற்றோர்களான ஜீதா, ஜிதானி ஆகியோர் கல்பனாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் முகம் தெரியாத நபர் என போன் செய்தார்.

அவர் என்னிடம் பேசுகையில், விக்ராந்த் மற்றும் அவர் பெற்றோர் சேர்ந்து கல்பனாவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றிவிட்டனர் என கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

பின்னர் உடனடியாக அவர் இடத்துக்கு சென்ற போது கல்பனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவலை அறிந்து அங்கு சென்று போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

என் சகோதரி மரணத்துக்கு காரணமான மூவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மூவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்