பாகிஸ்தானில் பெய்து வரும் பருவமழைக்கு இதுவரை 310 போ் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக, இதுவரை 310 போ் மரணமடைந்துள்ளனா்; 239 போ் காயமடைந்தனா்.
மரணமடைந்தவா்களில் 107 போ் சிறார்கள் எனவும் 70 போ் பெண்கள் எனவும் அரசு சார்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே பருவமழை காரணமாக சிந்து மாகாணம்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணத்தில் மட்டும் 136 போ் மழை தொடா்பான சம்பவங்களில் பலியாகியுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, கைபா் பாக்துன்கவா மாகாணத்தில் 116 போ் பருவமழைக்கு பலியாகினா். பஞ்சாப் மாகாணத்தில் 16 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 21 பேரும், ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் 12 பேரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச் சரிவு போன்ற சம்பவங்களில் மரணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் போராடி வரும் சூழலில், பருவமழை பாதிப்பால் அவா்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.