இந்தியாவில் இளம்மனைவியை திட்டம் போட்டு சுட்டு கொன்ற கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் நடியா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோய்தப். இவர் மனைவி சப்னா பிஸ்வாஸ்.
சப்னா மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். பணி காரணமாக இரவு பல நாட்கள் தாமதமாக தான் அவர் வீட்டுக்கு வருவார்.
இதனால் மனைவி நடத்தையில் ஜோய்க்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதோடு வேலை எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்த ஜோய் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
மேலும் சப்னா போனில் பணி தொடர்பாக பலரிடம் பேசுவதற்கு ஜோய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மாலை சப்னா வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம் சப்னா இரத்த வெள்ளத்தில் கிடந்தார், பின்னர் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்ட ஜோய் அவரை கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று அவரை மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
தலைமறைவாக உள்ள ஜோயை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.