4வது திருமணம் செய்து கொள்ள தயாரான 23 வயது பெண்! தடையாக இருந்த பார்வையற்ற மகனை கொன்ற கொடூரம்

Report Print Raju Raju in தெற்காசியா
656Shares

இந்தியாவில் நான்கு திருமணம் செய்து கொள்வதற்கு 4 வயது மகன் தடையாக இருந்ததால் அவனை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தர்மஷீலா தேவி (23). இவருக்கும் அருண் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் சஜன் குமார் என்ற மகன் பிறந்தான்.

தற்போது 4 வயதாகும் சஜனால் பேசவோ பார்க்கவோ முடியாது.

அருணை திருமணமான ஒரு ஆண்டில் தேவி பிரிந்துவிட்டார், பின்னர் சஜனுடன் தனியாக வசித்து வந்த தேவி நபர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட, மகேஷ் என்பவரை மூன்றாவதாக மணந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் மகேஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து நான்காம் திருமணம் செய்து கொள்ள தேவி முடிவெடுத்தார். ஆனால் இதற்கு மகன் சஜன் தடையாக இருப்பதாக எண்ணிய தேவி மகனை தண்ணீரில் மூழ்கி கொலை செய்துள்ளார்.

அவன் சடலம் தண்ணீரில் மிதப்பதை பார்த்த கிராம மக்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு தேவியிடம் விசாரித்து போது நடந்த அனைத்தையும் அவர் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து பொலிசார் தேவியை கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்