தாய்லாந்தில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையிலும் போராட்டம்!

Report Print Karthi in தெற்காசியா
162Shares

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர். இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தாய்லாந்து வீதிகளில் ஒன்று திரண்டு முடியாட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நாடு முழுவதும் அவரச நிலையை பிரகடணபடுத்தியிருந்தார்.

ஆனால் மக்கள் நான்காவது நாளாக அரசின் அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் அரசாங்கம் பேச விரும்புவதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் தலைவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தபோதும் மக்களும் மாணவர்களும் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தினை வழிநடத்தி வருகின்றனர்.

இன்று கொட்டும் மழையில் மக்கள், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும், சர்வாதிகார ஆட்சியை உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை எழுப்பி ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் 70 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் வன்முறைகள் வெடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

முன்னதாக போராட்டம் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறியிருந்த இவர், அரசு யாருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட போகின்றது என்பது குறித்த தகவல்களை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்காக்கின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான விக்டரி நினைவுச்சின்னம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கைப்பற்றியும் பொலிசார் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. விக்டரி நினைவுச்சின்னத்தில் மட்டும் சுமார் 10,000 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கு போராட்டத்தை அடக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்