அதிலிருந்து மீள முடியவில்லை! மனைவி மற்றும் 2 குழந்தைகளை உயிரோடு எரித்த தொழிலதிபர்.. பின்னர் எடுத்த முடிவு

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் மனைவி சீமா தேவி (36). தம்பதிக்கு மீனா (15) என்ற மகளும், ஹர்தீஷ் (12) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தர்மசாலா தனது குடும்பத்தினர் மூவருக்கும் மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது டீசல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார்.

இதை தொடர்ந்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கு தான் தற்கொலை செய்து கொள்வதாக நண்பருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தர்மபாலா எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளோம்.

அதில், கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்னை தொழிலதிபர் ஒருவர் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

அதிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, இதன் காரணமாகவே இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்