மிகவும் வயிறு வலிப்பதாக கூறிய 15 வயது சிறுமி! மருத்துவ பரிசோதனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா
25412Shares

நவி மும்பையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொலிசார் 4 மாதத்துக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 15 வயது சிறுமியொருவர் தனக்கு மிகவும் வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

வயிற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும் என சந்தேகித்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று பரிசோதித்ததில் 8 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அந்தப் பெண்ணை விசாரித்ததில் அதேபகுதியில் வடா பாவ் விற்கும் நபர்தான் கர்ப்பத்திற்குக் காரணம் என தெரியவந்திருக்கிறது. உடனே இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதுதெரிந்த அந்த ஆள் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் அந்த நபரின் முழுப்பெயர் தெரியாததால் பொலிசாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் நவிமும்பைக்கு திரும்ப வந்துவிட்ட தகவலை அறிந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

விசாரித்ததில் 2018ஆம் ஆண்டே ஒரு சிறுமியை கடத்திய குற்றம் மற்றும் மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

You may like this video


மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்