வெறும் ரூ 200 கொடுத்து நிலத்தை லீஸுக்கு எடுத்த ஏழை விவசாயி! அதில் குழி தோண்டிய போது கிடைத்த நம்பமுடியாத அதிஷ்டம்

Report Print Raju Raju in தெற்காசியா
223Shares

இந்தியாவில் 200 ரூபாய்க்கு லீஸ் எடுத்த நிலத்தில் 60.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் விவசாயிக்கு கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் பன்னா பகுதியில் ஏழை விவசாயியான லகான் யாதவ் (45) என்பவர் 10க்கு 10 நிலத்தை வெறும் 200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்துள்ளார்.

அதில் அண்மையில் குழி தோண்டியபோது கிடைத்த ஒரு கூழாங்கல் வித்தியாசமாக தெரியவே அரசு அதிகாரியிடம் எடுத்து சென்று காண்பித்துள்ளார்.

அப்போது அது 14.98 காரட் வைரம் என தெரிய வந்ததால், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

அந்த வைரம் சனிக்கிழமை 60 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலம் போனது. அந்த பணத்தில் 1 லட்சம் ரூபாயில் மோட்டார் சைக்கிள் வாங்கிய அவர், எஞ்சிய பணத்தை தனது 4 குழந்தைகளின் கல்வி செலவுக்காக பிக்ஸ்ட் டெபாசிட் செய்துள்ளார்.

இது குறித்து யாதவ் கூறுகையில், நான் படித்தவன் கிடையாது, இந்த பணத்தை என் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்வேன்.

என் உறவினர்கள் வற்புறுத்தலால் தான் மோட்டார் சைக்கிள் வாங்கினேன், நான் வைத்திருந்த சைக்கிளே எனக்கு மகிழ்ச்சியை தந்து வந்தது.

நிலத்தில் இன்னொரு வைரத்தைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்