திடீரென பெண்ணாக மாறிய கோடீஸ்வரர்! நடந்தது என்ன? வெளியான ஆச்சரிய புகைப்படம்

Report Print Raju Raju in தெற்காசியா
93Shares

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஆடை வடிவமைப்பாளர் தாம் பெண்ணாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ளவர் ஸ்வப்னில் ஷிண்டே.

இவரின் சொத்து மதிப்பு $600,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்வெப்னில் திடீரென தாம் பெண்ணாக பாலியல் மாற்றம் அடைந்துள்ளதாக சமூகவலைதளம் மூலமாக அறிவித்துள்ளார்.

இதோடு தனது பெயரை சாயிஷா என்றும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

மேலும் தாம் பெண் தோற்றத்தில் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், சிறுவயதில் இருந்து தான் வளர்ந்து போது தனிமையில் அதிகம் இருந்ததாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி முழுவதும், நான் வித்தியாசமாக இருந்ததால் வெளியே சிறுவர்கள் என்னைத் துன்புறுத்தினார்கள், உள் வலி மிகவும் மோசமாக இருந்தது.

தற்போது நான் யார் என்பதை உலகிற்கு தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சாயிஷாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்